மின் வெட்டை அமுல்படுத்த தயாரில்லை

197 0

குறுகிய நேரத்திற்காவது மின் வெட்டை அமுல்படுத்த தயாரில்லை என்று மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார். 

டீசல் பிரச்சினையால் நெருக்கடியான நேரங்களில் (Peak Time) 2 மணித்தியால மின் வெட்டு அமுல்படுத்துமாறு கடந்த தினங்களில் தன்னிடம் தொழில்நுட்ப பிரிவினால் யோசனை முன் வைக்கப்பட்டிருந்ததாகவும் அவர் கூறினார்.

இன்று காலை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற எரிசக்தி முகாமையாளர்கள் சங்கத்தின் வருடாந்த கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அமைச்சர் இதனைக் கூறினார்.

இங்கு தொடர்ச்சியாக உரையாற்றிய அமைச்சர் கூறியதாவது,

“விக்டோரிய, ரந்தெனிகலவில் மிகவும் குறைந்தளவில் நீர் இருக்கின்றன. மழை பெய்யவில்லை. நாங்கள் ஒரு போதும் மின்சாரத்தை துண்டிக்க தயாரில்லை. நாட்டின் தேவையை முகாமை செய்து தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குவதற்கு அமைச்சரவையில் நான் விளக்கங்களை முன் வைத்தேன்.

இதற்கு மேலதிகமாக எவ்வளவு செலவாகும் என்று கூறினேன். சுமாராக 52 பில்லியன் புதிதாக செலவு ஏற்படும் என்று நாம் கணக்கிட்டோம். நல்லவேளை காசல்ரீ தேக்கத்தில் சிறிது நீர் கிடைத்ததால் அதனை 32 பில்லியன் வரை குறைக்க முடிந்தது” என்றார்.

Leave a comment