அத்தியவசிய பொதுச் சேவையின் உள்ளடக்கங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்

215 0

அத்தியவசிய பொதுச் சேவை சட்டமூலத்தின் உள்ளடக்கங்கள் தொடர்பான பிரேரணை இன்று பாராளுமன்றத்தில் முறையாக நிறைவேற்றிக் கொள்ளப்பட்டதாக சபாநாயகர் அலுவலகம் கூறியுள்ளது. 

குறித்த பிரேரணை இன்று பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பிற்காக சமர்பிக்கப்பட்ட போது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே நிலவிய அமைதியின்மையை அடுத்து, பாராளுமன்ற நடவடிக்கைகளை ஆகஸ்ட் 4ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த சம்பவங்கள் தொடர்பான அறிக்கை ஒன்று சபாநாயகர் அலுவலகத்தினால் வௌியிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் அமைதியின்மை தொடர்ந்தால் உறுப்பினர்களிடம் வாய்மூலம் வாக்கு பெறப்படும் என்று சபாநாயகரால் அறிவிக்கப்பட்டு, அதன் பின் வாய்மூல வாக்கெடுப்பு நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஆளும்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் தமது ஆசனங்களில் இருந்து எழுந்து நின்று குறித்த யோசனைக்கு சார்பாக வாய்மூலம் வாக்களித்துள்ளதுடன், அதன்படி அந்த பிரேரணை முறையான விதத்தில் பாராளுமன்றத்தின் ஊடாக நிறைவேற்றிக் கொள்ளப்பட்டதாக சபாநாயகர் கூறியுள்ளார்.

Leave a comment