வட மாகாணத்தில் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்காக ஜப்பான் உதவி

226 0
வட மாகாணத்தில் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்காக ஜப்பான் அரசாங்கம் மேலும் 6 இலட்சத்து 11 ஆயிரம் அமெரிக்க டொலர் வழங்க முன்வந்துள்ளது.
வட மாகாணத்தில் மீள்குடியமர்த்தும் பணிகளை இலங்கை அரசாங்கம் துரிதப்படுத்தும் நிலைமையினை கருத்திற்கொண்டே ஜப்பான் இந்த உதவியை வழங்க முன்வந்துள்ளது.
இதன் மூலம் மீள்குடியேறுபவர்கள் தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஒப்பந்தம் நேற்று முன்தினம் கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதுவராலயத்தில் கைச்சாத்திடப்பட்டது.
கடந்த 2003ஆம் ஆண்டு முதல் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்காக ஜப்பானிய அரசாங்கம் உதவிகளை வழங்கி வந்துள்ளது.
கடந்த மூன்று வருட காலப்பகுதியினுள், ஜப்பானிய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஒரு லச்சத்திற்கும் அதிகமான கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a comment