எய்ட்ஸ் நோயினால் 200 பேர் பலி

428 0

உலகம் முழு­வதும் கடந்த 2016 ஆம் ஆண்டில் மாத்­திரம் 10 இலட்சம் பேர் எய்ட்ஸ் நோயினால்        உயி­ரி­ழந்­துள்­ளனர். பிரான்ஸ் தலை­நகர் பாரிஸில் இடம்­பெற்ற ஐக்­கிய நாடுகள் சபையின் எய்ட்ஸ் அறி­வியல் கருத்­த­ரங்கில் வெளி­யி­டப்­பட்ட ஆய்­வ­றிக்­கை­யி­லேயே இந்த விடயம்                                குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­துடன் இலங்­கையில் கடந்­தாண்டில் மாத்­திரம் 200 பேர் எச்.ஐ.வி எய்ட்ஸ் நோயினால் உயி­ரி­ழந்­துள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மேலும் உலகம் முழு­வதும் எய்ட்ஸ் நோயினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் 53 சத­வீதம் பேருக்கு       மாத்­தி­ரமே உரிய மருத்­துவ வச­திகள் கிடைக்­கின்­றன.   எனினும் விழிப்­பு­ணர்வு பிரச்­சா­ரங்கள் மூலம் எய்ட்ஸ் நோயா­ளி­களின் உயி­ரி­ழப்­புகள் கணி­ச­மாக குறைந்­துள்­ள­தா­கவும் அந்த              அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

2005 ஆம் ஆண்டில் எய்ட்ஸ் கார­ண­மாக 19 இலட்சம் பேர் உயி­ரி­ழந்­தனர். 2017 ஆண்­டா­கும்­போது   அந்த எண்­ணிக்கை படிப்­ப­டி­யாக குறைந்து வரு­கி­றது. எதிர்­வரும் 2020 ஆம் ஆண்­டுக்குள் 3 கோடி எய்ட்ஸ் நோயா­ளி­க­ளுக்கு முறை­யான மருத்­துவ சிகிச்சை கிடைக்க ஐ.நா. சபை நட­வ­டிக்கை எடுத்து வரு­கின்­ற­தென ஆய்­வ­றிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

எய்ட்ஸ் நோயா­ளி­களில் 50 வீதத்­திற்கும் மேற்­பட்டோர் கிழக்கு, தெற்கு ஆபி­ரிக்­காவில்                    வாழ்­கின்­றனர். இங்கு ஐ.நா. சபை மேற்­கொண்டு வரும் விழிப்­பு­ணர்வு நட­வ­டிக்­கை­களின்           கார­ண­மாக எச்.ஐ.வி வைரஸ் பர­வு­வது குறைந்­துள்­ளது.  ஆனால் மத்­திய கிழக்கு , வட ஆப்­பி­ரிக்கா, கிழக்கு ஐரோப்பா, மத்­திய ஆசியா பகு­தி­களில் எச்.ஐ.வி வேக­மாகப் பரவி வரு­வ­தா­கவும் அந்த அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

புதிய நோய்த்தொற்றுக்கள் 1000 பதிவாகியுள்ளதாக சுகாதார திணைக்களத்தின் தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு பிரிவு  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment