தமிழகம் முழுவதும் இளம் வாக்காளர்களை பட்டியலில் சேர்க்க சிறப்பு முகாம்

284 0

தமிழகம் முழுவதும் அனைத்து வாக்கு சாவடி மையங்களில் இளம் வாக்காளர்கள் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

18 வயது முதல் 21 வயது வரை உள்ள இளம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க தேர்தல் கமி‌ஷன் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.இந்திய தேர்தல் ஆணைய உத்தரவுப்படி 1.1.2017 அன்றைய தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் இளம் வாக்காளர்கள், மற்றும் விடுபட்ட வாக்காளர்களை பட்டியலில் சேர்த்தல் தொடர்பான சிறப்பு பணிகள் வருகிற 31-ந்தேதி வரை நடக்கிறது.

இதற்கான சிறப்பு முகாம்கள் நேற்று (9-ந்தேதி), 23-ந்தேதியும் அனைத்து வாக்குசாவடி மையங்களில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி இன்று தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் நடந்தது.சென்னையில் அனைத்து வாக்கு சாவடி மையங்களில் இளம் வாக்காளர்கள் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் நடந்தது.

இதில் வாக்காளர் நிலை அலுவலர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.சென்னையில் 1 லட்சத்து 1308 இளம் வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரின் பெயர்களையும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற வைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்கள்.

மேலும் செல்போனில் TNELE CTION என்ற ‘ஆப்’பை பதிவிறக்கம் செய்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம். பெயர் சேர்க்க வழங்கப்படும் படிவம் 6-ல் முதலில் தந்தை பெயர் மட்டுமே கேட்கப்பட்டு இருக்கிறது. தற்போது வழங்கப்படும் படிவம் 6-ல் தாய் பெயரும் குறிப்பிட கேட்டு கொண்டுள்ளது.

Leave a comment