இந்திய பிரதமரை இன்று சந்திக்கின்றார் இலங்கை பிரதமர்

235 0

இந்தியா சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இன்றையதினம் சந்திக்கவுள்ளார்.

மேலும் அமைச்சர்களான சுஸ்மா சுவராஜ், நிட்டின் கட்காரி ஆகியோரையும் பிரதமர் சந்திப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்புகளின் போது இலங்கை – இந்திய நல்லுறவு மற்றும் பொருளாதார தொடர்புகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்படவுள்ளன.

குறிப்பாக எட்கா உடன்படிக்கை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

அதேநேரம் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியையும் பிரதமர் சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.