சந்தன மரகுற்றி கடத்தல் – ஒருவர் கைது

246 0

இந்தியாவில் இருந்து சந்தன மரகுற்றிகளை கடத்தி வந்த ஒருவர் இன்று கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடல் மார்க்கமாக 511 கிலோ கிராம் நிறையான பெறுமதியான சிவப்பு சந்தன மரகுத்திகளை கடத்தி வந்தபோதே அவர் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடற்படை புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலுக்கு அமையவே இந்த கடத்தல் நடவடிக்கை முறியடிக்கப்பட்டுள்ளது.

கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட ‘டிங்கி’ ரக படகும் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கைது செய்யப்பட்டவர் சுங்க அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை, கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய இரண்டு கிலோ கிராம் நிறையுடைய கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடத்தி வரப்பட்ட கேரள கஞ்சாவை முச்சக்கர வண்டி மூலம் எடுத்துச் சென்ற வேளையிலேயே இவர் கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் வத்தளை காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இதேவேளை 204 கடற் சங்குகளை கடத்த முயற்சித்த ஒருவர் கல்பிட்டியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

முச்சக்கரவண்டியொன்றில் குறித்த சங்குகள் கடத்தப்பட்டபோது காவல்துறையினரால் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த சங்குகளை பயன்படுத்தி ஆபரணங்களை நிர்மானித்தல் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தல் போன்ற நடவடிக்கைகளில் கைதுசெய்யப்படவர் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.