தென் ஆபிரிக்காவில் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் 20 மாணவர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் பயணித்த சிறிய ரக பேரூந்துகள் இரண்டு நேருக்கு நேராக மோதியதனை அடுத்து தீ பரவல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் 5 வயது முதல் 20 வயதானவர்கள் என போக்குவரத்து துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இடிபாடுகளுக்கு இடையே இருந்து பல சிறார்கள் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், மரணமான மாணவர்களின் குடும்பத்தவர்களுக்கு, தமது அனுதாபத்தை தென் ஆபிரிக்க போக்குவரத்து அமைச்சர் ஜோ மஸ்வங்கன்யி வெளியிட்டுள்ளார்.
கடந்த வருடத்தை விட இந்த வருடம் தென் ஆபிரிக்க வீதிகளில் இடம்பெற்ற விபத்துக்களின் எண்ணிக்கை 51 சத வீதத்தால் அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

