பதினெட்டு வயதுவரை மாணவர்களை பாடசாலைக்கு பெற்றோர்கள் கட்டாயம் அனுப்ப வேண்டும்- விஜயகலா மகேஸ்வரன்(காணொளி)

279 0

பதினெட்டு வயதுவரை மாணவர்களை பாடசாலைக்கு பெற்றோர்கள் கட்டாயம் அனுப்ப வேண்டும் என சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கேட்டுக்கொண்டார்.

இன்று தீவகம் வேலனை மத்திய கல்லூரியில் இலங்கைக்கான துருக்கி நாட்டின் உயர்ஸ்தானிகரால் பாடசாலை மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் இவ்வாறு குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்தில் கல்வி வளங்கள் சரியாக பங்கிடப்படாத நிலை காணப்படுகிறது மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தில் மீனவ சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் கல்வி கற்காமல் தொழிலுக்குச் செல்லும் நிலை காணப்படுகின்றது இந்நிலை மாற்றப்பட்டு மாணவர்கள் கல்வி கற்க பாடசாலைக்கு அனுப்பப்பட வேண்டும் என சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர்

விஜயகலா மகேஸ்வரன் கேட்டுக்கொண்டார்.

கிழக்கு மாகாணத்தில் பெற்றோர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுச் செல்வதனால் மாணவர்கள், குழந்தைகள் சிறுவர் காப்பகத்தில் வளரும் நிலை காணப்படுகிறது.

மலையகத்தில் சிறுவயதிலேயே சிறுவர்கள் தொழிலாளிகளாக பெற்றோர்களால் அனுப்பப்படுகின்றனர். எனவே பதினெட்டு வயதிற்கு குறைந்தவர்களை தொழிலுக்கு அனுப்புபவர்க்கு எதிரான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் குறிப்பிட்டார்.

நிகழ்வில் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சின் செயலாளர் இமல்டா சுகுமார், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன், வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எஸ்.உதயகுமார், தீவக கோட்டக்கல்விப் பணிப்பாளர்கள். பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.