கன்னியாகுமரி கடலில் சஜாக் நடவடிக்கை ஒத்திகை

374 0

201607271150279659_Kanyakumari-to-prevent-infiltration-of-militants-at-sea_SECVPFஇந்தியாவுக்குள் மும்பை கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து மத்திய அரசு கடல் வழி பாதுகாப்பையும், கண்காணிப்பையும் பலப்படுத்தி உள்ளது.இதற்காக அடிக்கடி இந்திய கடல் பகுதியில் கண்காணிப்பு ஒத்திகை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. மாநில அரசுகள் சத்ராக் ஆபரேசன் என்ற ஒத்திகை நிகழ்ச்சியை இதற்கு முன்பு நடத்தி உள்ளன.தற்போது கடலோர காவல் படை மற்றும் மாநில அரசின் தமிழக பாதுகாப்பு குழும போலீசாரும் இணைந்து நடத்தும் சஜாக் ஆபரேசன் என்ற ஒத்திகை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி, குமரி மாவட்ட கடலோர பாதுகாப்பு குழும போலீசார், கன்னியாகுமரி கடலில் இன்று அதிகாலை 6 மணிக்கு சஜாக் ஆபரேசன் ஒத்திகை நிகழ்ச்சியை தொடங்கினர்.இன்ஸ்பெக்டர் சகாய ஜோஸ் தலைமையில் போலீசார் மற்றும் வீரர்கள் 3 அதிநவீன ரோந்து படகுகளில் கடலுக்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த ஒத்திகை நிகழ்ச்சி ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவுப்படி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களிலும் ஒரே நேரத்தில் நடைபெற்றது. ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலும், நெல்லை மாவட்டம் கூடங்குளம் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழை வரை இச்சோதனை நடத்தப்பட்டது.இதில் சப்-இன்ஸ்பெக்டர் ஜாண் கிங்ஸ்லி கிறிஸ்டோபர், நம்பியார், மணிகண்டன், சரவண முருகன், மகாலிங்கம், நாகராஜன், தியாகராஜன் ஆகியோர் 3 குழுக்களாக பிரிந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இவர்களை தவிர சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன், ஏட்டு நீலமணி ஆகியோர் கடற்கரை மணலில் செல்லும் வாகனம் மூலம் கடற்கரை கிராமங்களை சுற்றி வந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
இதுபோல அனைத்து கடற்கரை கிராமங்களில் இருந்தும் நகருக்குள் செல்லும் சாலைகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. சோதனை சாவடிகளிலும் வாகன சோதனை நடந்தது.
இன்று மாலை 6 மணி வரை சஜாக் ஆபரேசன் ஒத்திகை நடக்கிறது.