ஜெயலலிதா அவதூறு வழக்கு- விஜயகாந்த்-பிரேமலதா

311 0

201607271103176048_Defamation-case-against-Jayalalithaa-Vijayakanth-Premalatha_SECVPFவிழுப்புரத்தில் கடந்த 30.8.2012 அன்று தே.மு.தி.க. சார்பில் விஜயகாந்த் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் விஜயகாந்த் கலந்துகொண்டு பேசும்போது தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
உளுந்தூர்பேட்டை அருகே எறஞ்சி கிராமத்தில் கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி 2-ந் தேதி தே.மு.தி.க. சார்பில் மாநாடு நடந்தது. இதில் கலந்து கொண்ட தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, அப்போதைய எம்.எல்.ஏ.க்கள் பார்த்தசாரதி, வெங்கடேசன் ஆகியோர் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக அரசு வக்கீல் பொன்.சிவா, விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்குகள் விசாரணையின்போது 4 பேரும் கோர்ட்டில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மேலும் விஜயகாந்த் தரப்பில், ஒட்டுமொத்த அவதூறு வழக்குகளையும் ஒரே கோர்ட்டில் விசாரணை நடத்துமாறு சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து விஜயகாந்த் மீதான வழக்குகளை விசாரிக்க இடைக்கால தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த நிலையில் நேற்று விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் விஜயகாந்த் மீதான 2 வழக்குகளும் நீதிபதி சரோஜினிதேவி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகிய 2 பேரும் ஆஜராகவில்லை. வெங்கடேசன், பார்த்தசாரதி ஆகிய இருவரும் ஆஜரானார்கள்.

சென்னை ஐகோர்ட்டில் பணியாற்றி வரும் வக்கீலான தே.மு.தி.க.வை சேர்ந்த பாலாஜி என்பவர் ஆஜராகி விஜயகாந்த், பிரேமலதா ஆகிய இருவரும் ஆஜராகாததற்கான காரணம் குறித்து மனுதாக்கல் செய்தார்.

இதையடுத்து இந்த வழக்கை அடுத்த மாதம் (ஆகஸ்டு) 9-ந் தேதிக்கு நீதிபதி சரோஜினிதேவி ஒத்திவைத்ததோடு அன்றைய தினம் விஜயகாந்த் உள்பட 4 பேரும் கோர்ட்டில் நேரில் ஆஜராகி ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவு நகலை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.