அம்பலந்தொட பிரதேசத்தில் 4 பேர் மீது துப்பாக்கி பிரயோக சம்பவம்: இருவர் கைது

280 0

அம்பலந்தொட பிரதேசத்தில் 4 பேர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு கூரிய ஆயுதங்களால் தாக்கி ஒருவரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 15ம் திகதி மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் மேலும் மூன்று பேர் படுகாயமடைந்தனர்.

தங்காலை பிரிவின் குற்ற புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் இந்த சம்பவம் தொடர்பில் குறித்த சந்தேகநபர்கள் இன்று காலை அம்பலந்தொட டீ 7 எல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

41 மற்றும் 49 வயதுடைய சந்தேகநபர்கள் அம்பலந்தொட பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்டவர்கள் என தெரியவந்துள்ளது.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குற்றச்செயலுக்காக பயன்படுத்தப்பட்ட உந்துருளியொன்றும் மற்றும் அச்சந்தர்ப்பத்தில் அவர்கள் அணிந்திருந்த ஆடைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.