அரச முஸ்லிம் பாடசாலைகளின் 2 ஆம் தவணை கல்வி நடவடிக்கை இன்று ஆரம்பம்

228 0

அரச முஸ்லிம் பாடசாலைகளின் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று (19) ஆரம்பமாவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அரச முஸ்லிம் பாடசாலைகளின் முதலாம் தவணை கடந்த ஏப்றல் மாதம் 11 ஆம் திகதியுடன் நிறைவடைந்திருந்தது.

இதேவேளை, இன்று(19) ஆரம்பமாகும் முஸ்லிம் அரச பாடசாலைகளுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் ஜூன் மாதம் 03 ஆம் திகதி வரையில்  நடைபெறவுள்ளது.

ஜூன் மாதம் 03 ஆம் திகதி முதல் ஜூலை 06 ஆம் திகதி வரையில் அப்பாடசாலைகளுக்கு ரமழான் மாத விடுமுறை வழங்கப்படவுள்ளதாகவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.