டெங்கு வைரஸில் மாற்றம் : அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

255 0

நாடளாவிய ரீதியில் டெங்குக் காய்ச்சல் வேகமாகப் பரவிவரும் நிலையில் பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு தேசிய டெங்கு ஒழிப்புச் செயலணி எச்சரிக்கை விடுத்துள்ளது.

டெங்கு வைரஸில் ஏற்பட்ட மாற்றம் காரணமாகவே இந்த வருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் தேசிய டெங்கு ஒழிப்புச் செயலணி குறிப்பிட்டுள்ளது.

திடீர் சுகயீனம், காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்கள் பொது இடங்களுக்குச் செல்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திடீர் காய்ச்சல் உட்பட சுகயீனம் ஏற்படின் உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலைகளுக்குச் சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறும் பொதுமக்களுக்கு அறுவுத்தப்பட்டுள்ளது.

கடந்த மூன்று மாதங்களில் மாத்திரம் 30 ஆயிரத்துக்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இவர்களில் அதிகமானவர்கள் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் டெங்கு ஒழிப்புச் செயலணி தெரிவித்துள்ளது.