அமெரிக்க குண்டுத் தாக்குதலில் 90 ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் பலி

212 0

அமெரிக்க குண்டுத் தாக்குதலில் குறைந்த பட்சம் 90 ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

பிராந்திய ஆணையாளரை கோடிட்டு இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

அதி சக்திவாய்ந்த குண்டுத் தாக்குதல் ஒன்றை அமெரிக்கா அண்மையில், ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டுள்ள ஐ.எஸ் தீவிரவாதிகளை இலக்கு மேற்கொண்டது.

இந்த தாக்குதலில் தமது இயக்கத்திற்கு பாதிப்பில்லை என ஐ.எஸ் தீவிரவாதிகள் அறிவித்திருந்தனர்.

எனினும் இந்த தாக்குதலில் குறைந்த பட்சம் 90 ஐ.எஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளமை தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.