இந்தியன் ப்ரிமியர் லீக்

217 0

இந்தியன் ப்ரிமியர் லீக் தொடரின் நேற்று இடம்பெற்ற 15வது போட்டியில் டெல்லி டெயர்டெவில் அணி 51 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் டெல்லி டெயர்டெவில்ஸ் அணியும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின.

போட்டியில் முதலில் துடுப்பாடிய டெல்லி டெயர்டெவில்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 188 ஓட்டங்களை பெற்றது.

பதிலளித்தாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 9 விக்கட்டுக்களை இழந்து 137 ஓட்டங்களையே பெற்றது.

இதனிடையே, நேற்று இடம்பெற்ற மற்றுமொரு போட்டியில் சன்ரைசஸ் ஐதரபாத் அணியை எதிர்கொண்ட கொல்கத்த நைட்ரைடர்ஸ் அணி 17 ஓட்டங்களால் பெற்றி பெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பாடிய கொல்கத்த நைட்ரைடர்ஸ் அணி 6 விக்கட்டுக்களை இழந்து 172 ஓட்டங்களை பெற்றது.

பதிலளித்தாடிய சன்ரைசஸ் ஐதரபாத் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 155 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியை தழுவியது.

10வது இந்தியன் பிரிமியர் லீக் போட்டித் தொடரில் இன்று மேலும் இரண்டு போட்டிகள் இடம்பெறவுள்ளன.

முதல் போட்டியில், மும்பை இன்டியன்ஸ் அணியும் குஜராத் லையன்ஸ் அணியும் மோதவுள்ளன.

இரண்டாவது போட்டியில், ரோயல் செயஞ்சர்ஸ் பெங்களுர் அணியும், ரைசிங் பூனே சுபர்ஜெயிட் அணியும் பங்கேற்கவுள்ளன.