மின்னல் தாக்கி நபரொருவர் பலி – பெண்ணொருவர் படுகாயம்

253 0

கலேன்பிந்துனுவெவ – யாய 5 பிரதேசத்தில் இடம்பெற்ற மின்னல் தாக்குதலில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் இதில் கர்ப்பிணி பெண்ணொருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று மாலை மழை பெய்து கொண்டிருந்த போது இவ்வாறு மின்னல் தாக்கிய உயிரிழந்துள்ளவர் 34 வயதான நபர் என தெரியவந்துள்ளது.

கவலைக்கிடமாகவுள்ள 32 வயதான கர்ப்பிணி பெண், கலேன்பிந்துனுவெவ மருத்துவனையில் அனுமதிக்கபட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அநுராபுரம் மருத்துவமனைக்கு மாற்றியுனுப்பப்பட்டுள்ளார்.

இதேவேளை எதிர்வரும் சில தினங்களுக்கு நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் கடும் இடிமின்னல் தாக்கம் ஏற்படும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.

காலநிலை அவதான நிலையத்தின் அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மேற்கு மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையிலும் மழைப் பெய்யக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
மேலும் மேற்கு, சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இடிமின்னல் தாக்கம் ஏற்படும் சந்தர்ப்பத்தில் தற்காலிகமாக கடும் காற்றும் வீசக்கூடும்.
எனவே, இடிமின்னல் தாக்கத்தில் இருந்து தற்காத்துக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.