நரேந்திர மோடி, அடுத்த மாதம் இலங்கை வருகிறார்.

221 0

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, எதிர்வரும் மே மாதம் 11 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக புத்தசாசன மற்றும் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்தியப் பிரதமர், இரண்டு நாட்கள் இலங்கையில் தங்கியிருப்பார் என்றும் நீதியமைச்சர் கூறியுள்ளார்.

இலங்கையில் இடம்பெறவுள்ள சர்வதேச விசாக பண்டிகை ஆரம்ப நிகழ்வில் பிரதமர் மோடி, பிரதம அதிதியாகக் கலந்து கொள்ள உள்ளார் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச விசாக பண்டிகைக்காக அனைத்து ஏற்பாடுகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்காக 11 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

வெசாக் வைபவத்திற்கு அமைவாக மாகாண மற்றும் மாவட்ட மட்டங்களிலும் வெசாக் வைபவங்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.