காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில் இலங்கைக்கு தொடர்ந்தும் அழுத்தங்கள் – சர்வதேச மன்னிப்புச் சபை

249 0

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் தொடர்ந்தும் அழுத்தங்களை கொடுப்பதாக சர்வதேச மன்னிப்புச் சபை உறுதியளித்துள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கிளிநொச்சியில் நேற்று 43 ஆவது நாளாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இந்த நிலையில், வடக்கிற்கு விஜயம் செய்துள்ள சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் சல்லி செட்டி இதனைத் தெரிவித்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்பதில் சர்வதேச மன்னிப்புச் சபை உறுதியாக இருக்கிறது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகார்திற்கு இதற்கு தீர்வு காண்பதற்கு நீண்ட காலம் எடுத்துள்ளது.

இதன் காரணமாக சர்வதேச சமூகமும், ஜக்கிய நாடுகள் சபையும் தம்மை ஏமாற்றிவிட்டதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கருதுகிறார்கள்.

இந்த நிலையில், இலங்கை அரசாங்கத்திற்கு இரண்டு வருடங்கள் கால அவகாசம் வழங்கியமையானது, அதை சுந்திரமாக விட்டுள்ளது என்று அர்த்தமல்ல.

சர்வதேச சமூகத்திற்கு தாம் வழங்கிய உறுதிமொழிகளை அரசாங்கம் இந்த காலப்பகுதியில் நிறைவேற்றவேண்டும்.

அதற்காகவும் நாங்கள் எங்களுடைய நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் சல்லி செட்டி தெரிவித்துள்ளார்.