ஹாலிஎல காவற்துறை நிலையத்தில் சேவை புரியும் காவற்துறை அதிகாரி ஒருவர் மீது நேற்று எல்ல பிரதேசத்தில் வைத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
தனது சேவை முடிந்து பேருந்தில் வீடு திரும்பி கொண்டிருந்த போதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
குறித்த பேருந்தின் நடத்துனரும் மேலும் இருவரும் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலில் காயமடைந்த குறித்த காவற்துறை அதிகாரி, தற்போது பதுளை மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தாக்குதலுக்கான காரணம் இதுவரை அறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதியும் மற்றைய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் ஹப்புத்தளை பிரதேசத்தை சேர்ந்தவர்களுடன், அவர்கள் இன்று பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக காவற்துறை மேலும் குறிப்பிட்டுள்ளது.

