எரிவாயு விலை குறைப்பிற்கமைய உணவு பொருட்களின் விலையை குறைக்க முடியாது

86 0

எரிவாயு விலை குறைக்கப்பட்டாலும்,சிற்றுண்டிசாலையின் உணவு பொருட்களை குறைக்க முடியாது. தற்போதைய நிலைக்கமைய விலையை அதிகரிக்கவே நேரிடும்.

இறக்குமதி செய்யப்படும் உணவு பொருட்களின் விலையை வர்த்தகர்கள் தீர்மானித்துக்கொள்வதால் பொருட்களின் விலை கட்டுப்பாடற்ற வகையில் உயர்வடைகிறது என அகில இலங்கை சிற்றுண்டிசாலை உரிமையாளர் சங்கத்தின் தலைவல் அசேல சம்பத் தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

எரிவாயு விலை இன்று நள்ளிரவு குறைவடையும என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளமை வரவேற்கத்தக்கது.

எரிபொருளின் விலையை குறைத்து பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரனம் வழங்குவதை முழுமையாக ஏற்றுக்கொள்கிறோம்.

எரிவாயு விலை குறைக்கப்பட்டாலும்,சிற்றுண்டிசாலை,ஹோட்டல் உணவு பொருட்களின் விலையை குறைக்க முடியாது.

கோதுமை மா,பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை ஒவ்வொரு பிரதேசத்திற்கும் ஒவ்வொரு விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.பெரும்பாலான பகுதிகளில் ஒரு கிலோ கிராம் கோதுமை மா 420 ரூபாவிற்கு விற்கப்படுகிறது.

அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை நியாயமற்ற முறையில் அதிகரித்துள்ள நிலையில் சிற்றுண்டிசாலை மற்றும்,ஹோட்டல் உணவு பொருட்களின் விலையை ஒருபோதும் குறைக்க முடியாது,விலையை அதிகரிக்கவே நேரிடும்.

இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலையை வர்த்தகர்கர்கள் தீர்மானித்துக்கொள்வதால் பொருட்களின் விலை கட்டுப்பாடற்ற வகையில் அதிகரித்து செல்கின்றன.அத்தியாவசிய உணவு பொருட்களுக்கு அரசாங்கம் கட்டுப்பாட்டு விலையை விதிக்க வேண்டும் என்றார்.