விசேட அதிரடிப்படை வீரர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை

31 0

கொனஹேன முகாமில் பொலிஸ் விசேட அதிரடிப்படையை சேர்ந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கடவத்தை – கொனஹேன பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமில் ஆயுதக் களஞ்சியத்திற்கு பொறுப்பாக இருந்த 59 வயதான உப பொலிஸ் பரிசோதகரான இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு தற்கொiல செய்து கொண்டுள்ளார்.

உயிரிழந்தவர் கடுவலை ஜல்தர பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.