காலிகோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அகற்றப்பட்டமை குறித்து சட்டத்தரணிகள் சங்கம் கடும் அதிருப்தி

183 0

காலிகோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை பலவந்தமாக அகற்றியமை குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.

பொலிஸ்மா அதிபருக்கும் இராணுவதளபதிக்கும் எழுதியுள்ள கடிதத்தில் ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் விமர்சித்து காலிகோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிஸாரும் இராணுவத்தினரும்அகற்றியது குறித்து ; இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.காலிகோட்டையின் அரண்பகுதி பொதுமக்களிற்கான பகுதி இதன் காரணமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அகற்றுவதற்கான காரணங்கள் இல்லை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

மக்கள் தங்களிற்குள்ள பேச்சுசுதந்திரத்தை எதிர்ப்பை வெளிப்படுத்துவது உட்பட தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு உள்ள சுதந்திரத்தை பயன்படுத்த அனுமதிக்கவேண்டும் என்பதை நாங்கள் உங்களிற்கு தொடர்ந்து நினைவுபடுத்திவருகின்றோம்,என தெரிவித்துள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எரிபொருள் பற்றாக்குறை அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாட்டினால் மக்கள் பெரும் நெருக்கடிகளை சந்தித்துள்ள நாட்டின் தற்போதைய நிலைக்கு மக்களின் உரிமைகளை கட்டுப்படுத்துவதன் மூலம் தீர்வை காணமுடியாது எனவும் சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஆர்ப்பாட்டங்களையும் உடன்பட மறுக்கும் நிலையையும் முடக்குவதற்கு ஆயுதபடையினரை பயன்படுத்தக்கூடாது ஆர்ப்பாட்டக்காரர்களை அகற்றுவதில் படையினர் ஈடுபடுத்தப்பட்டமை குறித்த தகவல்கள் காரணமாக நாங்கள் கரிசனைஅடைந்துள்ளளோம் இது சட்டத்திற்கு முரணாணது எனவும் இலங்கை சட்ட்த்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.<