கொழும்பு நாட்டாமைகள் கொந்தளித்தனர்

47 0

கொழும்பில் உள்ள நாட்டாமைகள் அனைவரும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதுடன், எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். இதனால், கொழும்பின் பிரதான இடங்களில் பரபரப்பான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.

தங்களுக்கான கொடுப்பனவை, 15 ரூபாவினால் அதிகரித்து தருமா​று கோரியே, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போதைக்கு அவர்களுக்கு மூடையொன்றை அல்லது பொதியொன்றை இறக்கினால் அல்லது ஏற்றினால், 10ரூபாய் அல்லது 8 ரூபாய் இன்றேல் 6 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகின்றன. இந்நிலையில், அந்தக் கொடுப்பனவை 15 ரூபாவினால் அதிகரித்து தருமாறு கோரியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சாதாரண ஹோட்டலொன்றில் ஒரு கோப்பை தேநீரின் விலை 30 ரூபாயாகும் என சுட்டிக்காட்டியுள்ள அவர்கள், தங்களுக்கான கொடுப்பனவை 15 ரூபாவினால் அதிகரிக்குமாறு கோரியுள்ளனர்.