மொட்டு உறுப்பினரை கம்பத்தில் கட்டிய மக்கள்

142 0

மதுபோதை தலைக்கேறிய நிலையில், பிரதேசவாசிகளுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல்வாதியொருவர் மின்கம்பமொன்றில் கட்டப்பட்ட சம்பவம் பாணந்துறை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

கல்பாத்த பிரதேசத்தில் பிரதேசவாசிகளுக் அசௌகரியம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதை அடுத்தே, அவர் இவ்வாறு கட்டப்பட்டுள்ளார்.

தள்ளாடிக்கொண்டிருந்த அவர், பிடித்து மின்கம்பமொன்றில் கட்டிய பிரதேசவாசிகள், அது தொடர்பில் களுத்துறை வடக்கு பொலிஸ் நிலையத்துக்கு அறிவித்துள்ளனர். அதனையத்து விரைந்துவந்த பொலிஸார், அவரை கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.

தாமரை மொட்டைச் சின்னமாகக் கொண்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த மேற்படி பிரதேச சபை உறுப்பினர், கல்பாத்த பிரதேசத்தில் வைத்து மேலும் சிலருடன் இணைந்து மது அருந்தியுள்ளார்.

அதன்பின்னர், அங்கிருந்து கிளம்பிய அவர், கல்பாத்த, பஹுருபொல பிரதேசவாசிகளிடம் அநாகரீகமான முறையில் நடந்துகொண்டுள்ளார்.

அதன்பின்னர், அப்பகுதியைச் சேர்ந்தவர்கள், தள்ளாடிக்கொண்டிருந்த அவரைப் பிடித்து, மின்கம்பமொன்றில் கட்டிவைத்து, பொலிஸாரின் அவசர இலக்கத்துக்கு அறிவித்துள்ளனர்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் நாகொட வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர்   மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனைகளில் அவர் மது அருந்தியிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதனையடுத்து, அவரை  களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.