வழமையான பணிக்குத்திரும்பும் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம்!

63 0

பிரான்சு அரசின் பொதுமுடக்க நடைமுறைக்கிணங்க மூடப்பட்டிருந்த எமது பணியகம், எதிர்வரும் 05-05-2021 இல் இருந்துபுதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரையான நாட்களில் 14.00 முதல் 17.00 வரையும்சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 11.00 முதல் 17.00 வரையும் வழமையான பணிகளுக்காகத் திறந்திருக்கும்.

இந்த நேர நடைமுறை மறுஅறிவித்தல் வரை நடைமுறையில் இருக்கும்.நாட்டின் தற்போதய சூழ்நிலைக்கேற்ப, சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாகப் பணியக நடைமுறைகள் இருக்கும். அதன்படி, ஒரேநேரத்தில் இருவர் மட்டுமே பணியகத்துள் அனுமதிக்கப்படுவர்.

தேவையற்ற இடர்பாடுகளைத் தவிர்க்கும் வகையில், பணியகத்திற்கு வருமுன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு முன்னனுமதி பெற்றுவருமாறு கேட்டுக்கொள்கிறோம். கோவிட்-19 இன் தாக்கத்தால் ஏற்பட்ட தடங்கல்களையும் தாண்டி, எங்கள் இளந்தலைமுறையினர் தங்கள் தாய்மொழியை இடைவிடாது கற்பதற்கு வழிகாட்டி உதவுமாறு பெற்றோர்கள், ஆசிரியர்கள், தமிழ்ச்சோலை நிர்வாகிகளிடம் வேண்டிநிற்கிறோம்.