அனல் வீசிய கரையோரம் எனும் புதிய பாடல் ஒலிப்பதிவுடன்.- காணொளி

207 0
எம் தமிழ் உறவுகளே வணக்கம் .!
விடுதலையின் தாகம் கொண்ட இனமாக சிங்கள பேரினவாத முகத்திரை கிழித்து எமக்கான நீதியை நிலைநாட்டும் வரை முள்ளிவாய்க்கால் பெருவெளியில் உறங்கும் அனைத்து உறவுகளின் ஆன்ம பலிபீடத்திலிருந்து திசையெங்கும் முழங்கி அதிரும் உணர்வுகளாய்
அனல் வீசிய கரையோரம் எனும் புதிய பாடல் ஒலிப்பதிவுடன் உங்களை சந்திக்கிறோம்.
எங்கள் தமிழீழ தேச விடுதலையின் போராட்ட வரலாற்று பாதையில் தியாகங்களினதும் , இழப்புகளினதும் ,வலிகளினதும் ,அவலங்களினதும் ,துரோகங்களினதும் உச்சத்தை தொட்டு நெருப்பாற்று பெருவெளியாய் அனல் வீசிய முள்ளிவாய்க்கால் முகவரி தான் இந்த இசை தட்டின் அடி நாதம்.