கொக்குத்தொடுவாயில் வெளிமாவட்ட மீனவர்களின் வருகை மீனவர்கள் கவலை!

49 0

முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்குத்தொடுவாய் பகுதியில் புத்தளம் உடப்ப பகுதியினை சேர்ந்த மீனவர்கள் சிலரின் ஆதரவுடன் கடற்தொழிலுக்காக வருகை தந்துள்ளதாக பிரதேச மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.

கொக்குத்தொடுவாய் வடக்கு பகுதியில் அம்மன் கோவில் துறையில் உடப்பினை சேர்ந்த கடற்தொழிலாளர்கள் பலர் கடற்தொழில் நடவடிக்கைக்கு வருகை தந்துள்ளதால் பிரதேச கடற்தொழிலாளர்களின் நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளார்கள்.

உடப்பினை சேர்ந்த முப்பதிற்;க மேற்பட்டவர்கள் 12 தெப்பங்களுடனும் 5 படகுகளுடனும் வந்து வாடிகள் அமைத்து தொழில் செய்துவருகின்றார்கள் இவர்களுக்கு கொக்குத்தொடுவாயில் உள்ள முத்துமாரி அம்மன் கிராமிய கடற்தொழில் கூட்டடுறவு சங்கத்தினரின் ஆதரவுடன் ஒரு தெற்பத்திற்கு 5ஆயிரம் ரூபாவும்,படகு ஒன்றுக்கு பத்தாயிரம் ரூபாவும் பணம் பெற்று வெளிமாவட்டத்தவர்களை கடற்தொழில் செய்ய அனுமதித்துள்ளார்கள்.

கிராமிய கடற்தொழில் அமைப்பினரின் இவ்வாறான நடவடிக்கையினால் சொந்த கிராமத்தினை சேர்ந்த கடற்தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளதுடன்

இவ்வாறு வெளிமாவட்ட மீனவர்களை அனுமதிப்பது சட்டவிரோதமான செயற்பாடு என்றும் பணத்திற்காக கிராமிய கடற்தொழில் அமைப்பின் தலைவர் செயலாளர்கள் விலைபோயுள்ளதாகவும் இவ்வாறு வாங்கும் பணம் தொடர்பில் எந்த கணக்கும் காட்டப்படவில்லை என்றும் கிராமிய மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.