ஒட்டுசுட்டான்,கருநாட்டுகேணி பகுதிகளில் வீசிய கடும் காற்று 19 வீடுகள் சேதம்!

261 0

முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று(24) மாலை வீசிய கடும்காற்று மற்றும் மழையினால் ஒட்டுசுட்டான் மற்றும் கருநாட்டுக்கேணிப்பகுதிகளில் 19 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

கருநாட்டுக்கேணியில் வீசிய கடும் காற்றினால் நான்கு வீடுகள் சேதமடைந்துள்ளன நான்கு வீடுகளில் முன்பக்க கூரைகள் தூக்கிவீசப்பட்டுள்ளதுடன் இரண்டு வீடுகளில் மலசலகூட மேற்கூரையும் தூக்கிவீசப்பட்டுள்ளன.

இதில் அங்கவீனர் ஒருவரின் வீடும் ,பெண்தலைமைத்துவ குடும்பம் ஒன்றின் வீடும் சேதடைந்துள்ளதாக கரைதுறைப்பற்று பிரதேச சபையின் கொக்குத்தொடுவாய் பிரதேச உறுப்பினர் க.சிவலிங்கம் அவர்கள் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பான விபரங்களை திரட்டிவருவதாகவும் ஞாயிற்று கிழமை என்ற காரணத்தினால் அரச உத்தியோகத்தர்கள் எவரும் வருகை தரவில்லை என்றும் கிராம சேவகரிடம் விபரங்களை சமர்;ப்பிக்க நடடிக்கை எடுத்துள்ளதாகவும் பிரதேச சபை உறுப்பினர் க.சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் வீசிய கடும் காற்று மழையினால் 15 வீடுகள் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்து நிலையத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று 24.05.2020 மாலை 3.00 மணியளவில் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்சுட்டான் பிரதேசத்தில் கடும் காற்றுடன் மழை பெய்துள்ளது.

இதன்போது முத்தையன்கட்டு கிராமத்தில் இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளதுடன்,ஒட்டுசுட்டான் கிராமத்தில் ஒருவீடும் வித்தியாபுரம் கிராமத்தில் பத்து வீடுகளும்,சம்மளங்குளம் கிராமத்தில் இரண்டு வீடுகளும் சேதமடைந்துள்ளன.

பாதிக்கப்பட்ட குடும்பங்களின் விபரங்கள் கிராமசேவகர் ஊடாக சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதற்கட்ட உதவிகளை வழங்கும் நடவடிக்கை முன்னெடுத்துள்ளதாகவும் முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்து நிலையத்தினர் தெரிவித்துள்ளார்கள்.