திருவள்ளுவரைப் போல அதிமுக : அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு

48 0

இன்று திருவள்ளுவர் தினம் தமிழகம் முழுதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது, பிரதமர் மோடியும் கூட திருவள்ளுவர் தினத்துக்காக ட்விட்டரில் தமிழில் செய்தி பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் நல்லறம் போதித்த வித்தகராம் வள்ளுவரைப் பற்றி அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் பேசும்போது, “திருவள்ளுவர் சாதி, இனம், மதம் என அனைத்தையும் கடந்தவர், அந்த நிலையில்தான் அதிமுகவும் உள்ளது.

சாதி, மதம், இனம் பேசும் மனிதர்களை நல்வழிப்படுத்தும் அறிய மருந்து திருக்குறள். சாதி, மதம், இன வழி செல்வோர் அறவழி போதிக்கும் திருக்குறளை படித்து பின்பற்ற வேண்டும்.

திருக்குறள் படித்தால் அகவழி மணக்கும், மனமது தெளிவு பெறும், மனிதகுலம் தழைக்கும்” என்றார் அமைச்சர் ஜெயக்குமார்