கிழக்கு மாகாணம் மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கான ஆளுநர்கள் இன்றைய தினம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அந்தவகையில், கிழக்கு மாகாண ஆளுநராக அனுராதா யஹம்பத் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டள்ளார்.

அத்துடன் வடமத்திய மாகாண ஆளுநராக பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஷ பதியேற்றதையடுத்து 6 மாகாணங்களுக்குரிய ஆளுநர்கள் நியமனம் பெற்ற நிலையில், வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு ஆளுநர்களை நியமிப்பதில் தாமதம் ஏற்பட்டது.

மத்திய மாகாண ஆளுநராக லலித் கமகே , ஊவா மாகாண ஆளுநராக ராஜா கொல்லுரே, தென்மாகாண ஆளுநராக வில்லி கமகே , வடமேல் மாகாண ஆளுநராக ஏ.ஜே.எம். முஸம்மில், சப்ரகமுவ மாகாண ஆளுநராக டிக்கிரி கொப்பேகடுவ, மேல் மாகாண ஆளுநராக சீத்தா அரம்பேபொல ஆகியோர் ஜனாதிபதி முன்னிலையில் ஏற்கனவே பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

இந்நிலையில், இன்றையதினம் கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்குரிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், வடக்கிற்கான ஆளுநர் மாத்திரம் இதுவரை நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.