பெப்ரவரி மாத இறுதியில் அல்லது மார்ச் மாத ஆரம்பத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்படும்- கோட்டாபய

193 0

எதிர்வரும் பெப்ரவரி மாத இறுதியில் அல்லது மார்ச் மாத ஆரம்பத்தில் நாடாளுமன்றத்தை கலைத்து அதன் பின்னர் ஏப்ரல் மாத இறுதியில் நாடாளுமன்ற தேர்தலுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுப்பார் என அறிய முடிகின்றது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுடன் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பை அடுத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த முடிவுக்கு வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி பெப்ரவரி மாத இறுதியில் அல்லது மார்ச் மாத ஆரம்பத்தில் நாடாளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதி உத்தரவொன்றினை பிறப்பிப்பார் என அமைச்சரவை பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

19 ஆவது திருத்தத்தின்படி நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும் என்றால் 4 1/2 வருடம் நிறைவடைய வேண்டும் அல்லது நாடாளுமன்றில் 2/3 பெரும்பானமையை பெற்றே ஜனாதிபதியால் நாடாளுமன்றத்தை கலைக்க முடியும்.

ஆனால் தற்போது நாடாளுமன்றில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.