ஐ.நா.வின் புதிய பொதுச்செயலாளராக அந்தோனியோ குத்தேரஸ் நியமனம்

317 0

201610132243281434_un-appoints-antonio-guterres-as-new-secretary-general_secvpfஐ.நா.வின் புதிய பொதுச்செயலாளராக அந்தோனியோ குத்தேரஸ் முறைப்படி நியமனம் செய்யப்பட்டார்.ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி-மூனின் பதவிக் காலம் வரும் டிசம்பர் 31-ம் தேதியுடன் நிறைவடைகிறது. அதனைதொடர்ந்து இந்தப் பதவிக்கு வேறு ஒருவரை தேர்ந்தெடுக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சமீபத்தில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தியது.
இதில் போர்ச்சுகல் நாட்டின் முன்னாள் பிரதமரும் ஐ.நா.வின் அகதிகள் அமைப்பின் முன்னாள் தலைவருமான அந்தோனியோ குத்தேரஸ் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து 193 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐ.நா. பொது சபையின் இறுதி ஒப்புதலுக்காக இவரது பெயர் பரிந்துரை செய்யப்பட்டது.

இந்நிலையில்  ஐ.நா.வின் புதிய பொதுச்செயலாளராக அந்தோனியோ குத்தேரஸ் முறைப்படி நியமனம் செய்யப்பட்டார். இவர் அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல், 2021-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரை பதவி வகிப்பார்.

அந்தோனியோ குத்தேரஸ், போர்ச்சுக்கல் பிரதமராக 1995-ம் ஆண்டு முதல் 2002-ம் ஆண்டு வரையில் பதவி வகித்துள்ளார். மேலும், அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஆணையராக 2005-ம் ஆண்டு முதல் 2015 வரை பதவி வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது.