மேன்முறையீட்டு மனுவொன்றைத் தள்ளுபடி செய்த நீதிபதி இளஞ்செழியன்

318 0

ilancheliyanயாழ்ப்பாணம் மானிப்பாய் வாள்வெட்டு வழக்கில் மல்லாகம் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பு சரியானது என தீர்ப்பளித்துள்ள யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், அந்தத் தீர்ப்புக்கு எதிரான மேன்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளார்.

வீட்டுக்குள் அத்துமறிச் சென்றமை, சட்டவிரோதமாகக் கூட்டம் கூடி, சிறிய காயம் மற்றும் கடும் காயம் விளைவித்தமை 6 லட்சத்து 61 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்களைச் சேதப்படுத்திய குற்றச்சாட்டுகக்ளின் அடிப்படையில் 6 எதிரிகளுக்கு எதிராக சுன்னாகம் பொலிசாரினால் மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஓராண்டு கடூழியச் சிறைத் தண்டனை வழங்கிய மல்லாகம் நீதிமன்றம், 6 லட்சத்து 61 ஆயிரம் நட்டயீடு செலுத்துமாறு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட எதிரிகள் தாங்கள் சுற்றவாளிகள் என தெரிவித்ததையடுத்து, நடைபெற்ற வழக்கு விசாரணையின் முடிவில் இத் தீர்ப்பை மல்லாகம் நீதிமன்றம் வழங்கியிருந்தது.

இதனையடுத்து. இந்தத் தீர்ப்புக்கு எதிராக 3 எதிரிகள் யாழ் மேல் நீதிமன்றத்தில் மேன் முறையீடு செய்தனர்.

குறித்த மேன் முறையீட்டு மனு மீதான வழக்கு விசாரணை யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் நடைபெற்றது.

இதன்போது, யாழ்ப்பாணம் மானிப்பாய் வாள்வெட்டு வழக்கில் மல்லாகம் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பு சரியானது என தீர்ப்பளித்துள்ள யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், அந்தத் தீர்ப்புக்கு எதிரான மேன்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளார்.