புதிய அரசியலமைப்பு ஒருபோதும் நிறைவேறாது -செஹான்

56 0

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில்  அரசியலமைப்பு  நிபுணத்துவ குழுவினர்  சமர்பித்த அறிக்கையின்  நகல்களில் மொழி  ரீதியிலான  கருத்துக்களின்  வேறுப்பாடுகள் காணப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

இது தொடரபில மேலும் தெரிவித்த அவர்,

19 ஆவது  அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்ட விடயங்களில்  மொழி ரீதியில் கருத்து வேறுப்பாடுகளை உட்படுத்தி, ஐக்கிய தேசிய  கட்சி தமக்கு சாதகமாக சட்டங்களை உருவாக்கி கொண்டதன்  தொடர்ச்சியினை புதிய அரசியலமைப்பு விவகாரத்திலும்  பின்பற்றுகின்றது.

அத்துடன் அரசியலமைப்பு நிபுணத்துவ அறிக்கையில்  குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் அனைத்தும் எவ்வித     வேறுப்பாடுகளுமின்றி மூன்று  மொழிகளினாலும்   தெளிவுப்படுத்தப்பட வேண்டும். எவ்வாறு  இருப்பினும் புதிய  அரசியலமைப்பு ஒருபோதும்  நிறைவேற்றப்பட மாட்டாது என்றார்.

Leave a comment

Your email address will not be published.