நாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலைகளில் போதைப்பொருள் ஒழிப்பு வாரம் பிரகடனம்-அகில

34203 0

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் போதைப்பொருள் ஒழிப்பு வாரம்  பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு, ஜனாதிபதி செயலகம் மற்றும் அரச நிறுவனங்கள் ஒன்றிணைந்து போதைப்பொருள் பாவனை ஒழிப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுக்கின்றன.

போதைப்பொருள் ஒழிப்பை மாணவர்களின் மூலம் கற்றுக்கொள்வோம் என்ற தொனிப்பொருளின் கீழ் பாடசாலை மாணவர்களையும் பெற்றோர்களையும் இலக்காகக் கொண்டு பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தின் வழிகாட்டலின் கீழ் கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்பிரகாரம் ஜனவரி மாதம் 21 திகதி முதல் 25 ஆம் திகதி வரை போதைப்பொருள் ஒழிப்பு வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன் ஜனாதிபதி செயலகம் உட்பட அரச நிறுவனங்கள் இணைந்து ஒன்றிணைந்த வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக கல்வி துறை சார்ந்த அதிகாரிகள்,அதிபர்களை தெளிவூட்டுவதற்கான அனைத்து ஆலோசனைகளையும் கல்வி அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவிக்கையில்,

போதைப்பொருள் ஒழிப்பை வாழ்க்கையில் பழக்கமாக முன்னெடுக்க வேண்டும். போதைப்பொருளுக்கு மாணவர்கள் அடிமையாகும் நிலைமை ஏற்பட்டுள்ளது. 

இது சமூக அழிவுக்கு உந்து சக்தியாக அமையும். ஆகவே இந்த விவகாரம் மிகவும் பாரதூரமானது. சுற்று வட்ட சமூக சூழல் மாணவர்களை போதைப்பொருளுக்கு அடிமையாக்கின்றது. ஆகவே இந்த விவகாரம் தொடர்பாக மாணவர்களை தெளிவூட்டுவது மட்டுமன்றி அதற்கான செயற்திறன்மிக்க வேலைத்திட்டங்கள் அவசியம் என்றார்.

Leave a comment