முதலமைச்சருக்கு திருநங்கைகள் வேண்டுகோள்

300 0

201609180859373533_civic-elections-should-be-given-the-opportunity-to-admk_secvpfஉள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா எங்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என திருநங்கைகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

திருநங்கைகள் பாரதி கண்ணம்மா, சுதா ஆகியோர் நேற்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனுதாக்கல் செய்து இருக்கிறோம். அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா எங்களுக்கு வாய்ப்பு அளிப்பார் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். திருநங்கைகளை இழிவாக பேசிய காலத்தில் எங்களுக்கு நல்ல மதிப்பு கொடுத்தவர் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தான். திருநங்கைகள் என்றால், அவர்கள் ஆடுவார்கள், பாடுவார்கள் என்று தான் பலர் சொல்வார்கள்.

ஆனால் எங்களுக்கும் இந்திய அரசியலமைப்பு சட்டம் தெரியும் என்பதை நிரூபிக்க உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்கிறோம். கடந்த சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட வாய்ப்பு கேட்டோம். கிடைக்கவில்லை. இருந்தாலும், அ.தி.மு.க. சார்பில் 7 தொகுதிகளில் விருப்பத்துடன் பிரசாரம் செய்தோம்.

இந்த முறை உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு இருக்கிறோம். அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா எங்களுக்கு வாய்ப்பு கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும், நாங்கள் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வோம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.