சம்பந்தனுடன் எமக்கு தனிப்பட்ட கோபம் இல்லை – தினேஷ்

204 0

எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் மீது எமக்கு எந்தவொரு தனிப்பட்ட கோபமும் இல்லை. ஆசன அடிப்படையில் எதிர்க்கட்சியில் எமக்கே அதிகளவில் ஆசனங்கள் உள்ளன. ஆகவே நீதியான முறையின் பிரகாரம் எதிர்க்கட்சி தலைவர் பதவி எமக்கே பெற்றுத்தர வேண்டும் என கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பான வாக்குவாதத்தின் போதே அவர் மேற்கணடவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் உரையாற்றுகையில்,

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் எமக்கே அதிகளவிலான ஆசனங்கள் உள்ளன. தற்போது எமது குழுவில் 70 பேர் உள்ளனர். ஆகவே எதிர்க்கட்சி தலைவர் பதவி எமக்கே பெற்று தர வேண்டும் என நாம் கோரி எழுத்து மூல கடிதமொன்றை சபாநாயகரிடம் கையளித்தோம்.

இதன்போது இன்று தீர்மானத்தை வழங்குவதாக கூறியிருந்தீர்கள். புதிய தீர்மானமொன்றை வழங்குவதாகவே கூறினீர்கள். ஆனால் எங்கே தீர்மானம். எதிர்க்கட்சி தலைவர் பதவி எமக்கு பெற்தை் தர வேண்டும்.

சம்பந்தனுடன் எமக்கு தனிப்பட்ட பிரச்சினை இல்லை. அமிர்தலிங்கம் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோதும் அவருக்கு கீழ் நாம் செயற்பட்டுள்ளோம். ஆகவே சம்பந்தன் எமக்கு பிரச்சினையில்லை. எனினும் பாராளுமன்றத்தில் ஜனநாயக உரிமை பாதுகாக்க வேண்டும். சம்பிரதாயத்தை மீறி செயற்பட கூடாது. பாராளுமன்றத்தின் ஜனநாயகம் தற்போது செல்லாக் காசாக மாறிவிட்டது என்றார்.

Leave a comment