கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாக குற்றச்சாட்டு

306 0

Koththaவெள்ளைவான் ஊடாக இடம்பெற்ற காணாமல் போதல்கள் தொடர்பில், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இடதுசாரிகள் அமைப்பின் இணைப்பாளர் சமீர பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.

சிவில் சமுக அமைப்புகள் நடத்திய செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் வைத்து அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷவே வெள்ளை வான் கலாசாரத்தை கொண்டுவந்தார்.

அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இந்த விடயத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளமைக்கான காரணத்தை ஜனாதிபதியிடும், பிரதமரிடம் கோருவதாக அவர் குறிப்பிடடுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தில் இணைந்த ஏராளமான அமைச்சர்கள் மகிந்தராஜபக்ஷ, பசில், நாமல் ராஜபக்ஷ ஆகியோர் தொடர்பாக குற்றம் சுமத்தி வருகின்றனர்.

எனினும் ஏன் கோட்டாபய ராஜபக்ஷ தொடர்பில் அவர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதை தவிர்க்கின்றனர்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.