உள்ளூராட்சித் தேர்தலுக்கு மாவட்ட முகவர்களை நியமித்த தமிழ் அரசுக் கட்சி

Posted by - December 10, 2017

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் தமிழ் அரசுக் கட்சி மாவட்ட ரீதியில் அதிகாரமளிக்கப்பட்ட முகவர்களின் விபரங்களை மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளது. வடக்கிலுள்ள ஐந்து மாவட்டங்களுக்குமாறு அதிகாரமளிக்கப்பட்ட முகவர்களின் விபரங்களை தமிழ் அரசுக் கட்சியின் செயலர் துரைராஜசிங்கம் அந்தந்த மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளார். இதன்படி யாழ்ப்பாண ம் – மாவை.சோ.சேனாதிராசா கிளிநொச்சி    – சி.சிறிதரன் மன்னார்        – இ.சாள்ஸ் நிர்மலநாதன் முல்லைத்தீவு –  சாந்தி சிறிஸ்காந்தராசா வவுனியா     – ப.சத்தியலிங்கம்  ஆகியோர்

எங்கள் கொள்கையோடு உடன்படும் தரப்புக்களை இணைத்துச் செயறப்பட நாங்கள் தயாராகவே இருக்கின்றோம்!

Posted by - December 10, 2017

தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் வலிகாமம் மேற்கு பிரதேச சபைத் தேல்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுக நிகழ்வு நேற்று சனிக்கிழமை பிற்பகல் 04 மணியளவில் தமிழ்க் காங்கிரசின் வட்டுக்கோடை்டை அலுவலகத்தில் நடைபெற்றது.

பூட்டிய வீட்டுக்குள் அழுகிய சடலம்!

Posted by - December 10, 2017

மாத்தறையில், வீடொன்றினுள் இருந்து இறந்து பல நாட்களான ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அயலவர்கள் தகவல் தெரிவித்ததையடுத்து அங்கு சென்ற பொலிஸார், வீட்டின் பூட்டியிருந்த கதவை உடைத்துத் திறந்து உள்ளே சென்று ஆராய்ந்தனர். அப்போது, வீட்டின் படுக்கை அறையில் இருந்து, அழுகிய நிலையில் ஆண் ஒருவரின் சடலத்தை பொலிஸார் கண்டெடுத்தனர். அந்தச் சடலம் அந்த வீட்டில் வசித்த 64 வயது நபருடையது என்றும் தலையில் கடுமையாகத் தாக்கப்பட்டே அவரது உயிர் பிரிந்திருக்க

மண்சரிவு அபாயம் : 400க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றம்.!

Posted by - December 10, 2017

மண்சரிவு அபாயம் காரணமாக பதுளை மாவட்டத்தில் வெலிமடை மற்றும் ஹல்துமுல்ல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட ஒஹிய, உடவேரிய, லைபோன் ஆகிய தோட்டங்களில் இருந்த தொழிலாளர்கள் குடும்பங்களை தங்களின் குடியிருப்புக்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அண்மையில் பெய்த கடும் மழையை அடுத்து, ஏற்பட்ட அபாயம் காரணமாக ஒஹிய, உடவேரிய, லைபோன் தோட்டங்களின் 120 குடும்பங்களைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.இவர்கள் தற்காலிகமாக தங்குவதற்காக உடவேரிய தோட்டத்தில் கைவிடப்பட்ட தேயிலை தொழிற்சாலையொன்றில் தங்க வைக்கப்பட்ட போதிலும், அங்கு

உதயசூரியன் சின்னம்: வைக்கப்பட்ட பொறி!

Posted by - December 10, 2017

வெளிச்சவீடு என்றும் உதயசூரியன் என்றும் வீடு என்றும் தமிழர்களின் அர்ப்பணிப்பான விடுதலை இயக்கத்தால் உயிர்பிக்கப்பட்ட விடுதலை வேட்கையானது ஆசன

உடன்பாடு இன்றேல் தனித்துப் போட்டி- அமைச்சர் மனோ

Posted by - December 10, 2017

தமக்கு சின்னம் முக்கியம் இல்லையெனவும், எண்ணம் தான் முக்கியம் எனவும் தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் ஊடாக போட்டியிடுவதற்கான பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த பேச்சுவார்த்தையில் கூட்டணிக்கு ஒரு உடன்பாடு காணப்படாவிடின் தாம் தனித்துப் போட்டியிடுவோம் எனவும் மஸ்கெலிய நகரில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அமைச்சர் இதனைக் கூறியுள்ளார். தமிழ் முற்போக்கு கூட்டணி நுவரெலியா, கண்டி, இரத்தினபுரி, மாத்தளை, கேகாலை,

ஜனவரி முதல் பொலிதீன் சுற்றிவளைப்பு

Posted by - December 10, 2017

தரமற்ற பொலிதீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனை என்பவற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்புகளை முன்னெடுக்க மத்திய சுற்றாடல் அதிகார சபை தீர்மானித்துள்ளது. பொலிதீன் மற்றும் பிளாஸ்டிக் இறக்குமதிகளை பரிசீலிக்கும் நடவடிக்கைகளை தற்போது ஆரம்பித்துள்ளதாகவும் குறித்த சபை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி முதல் மைக்றோன் 20 இற்கும் குறைந்த நிறையுடைய பொலித்தீன் விற்பனைக்கு அரசாங்கம் தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கம்பஹாவில் எச்.ஐ.வி. தொற்றிய சந்தேகத்திற்கிடமான ஐவர்

Posted by - December 10, 2017

எய்ட்ஸ் நோய் ஒழிப்புப் பிரிவினால் கம்பஹா ரயில் நிலைய பகுதியில் கடந்த மூன்று நாட்களாக மேற்கொள்ளப்பட்ட இரத்த பரிசோதனை நடவடிக்கையின் பின்னர் எச்.ஐ.வீ.தொற்றாளர்கள் எனக் கருதப்படும் ஐவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவு அறிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் எய்ட்ஸை ஒழிப்போம், இரத்தப் பரிசோதனையில் அனைவரையும் உள்வாங்குவோம் எனும் தொனிப்பொருளில் இரத்தப் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கம்பஹாவில் மாத்திரம் கடந்த மூன்று தினங்களில் சுமார் 160 பேர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதாகவும் இதில் ஐவர் சந்தேகத்திற்கிடமானவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும்

புதிய கூட்டுக்களும் – தமிழ் மக்கள் பேரவையின் சிதைவும்?

Posted by - December 10, 2017

உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போது ஒரு பலமான மாற்று அணியைக் கட்டியெழுப்பும் விதத்தில் சம்பந்தப்பட்ட கட்சிகளோடு உரையாடி ஓர் ஐக்கியத்தை ஏற்படுத்துவது என்று யாழ்ப்பாணத்தில் உள்ள வெகுசன அமைப்புக்கள் சில கூடிக் கதைத்தன.

322 சபைகளுக்கு தாமரை மொட்டு சின்னத்தில் வேட்பாளர் பட்டியல்!

Posted by - December 10, 2017

இலங்கை பொதுஜன முன்னணியானது கூட்டு எதிர்க் கட்சி உட்பட 20 அரசியல் கட்சிகளுடன் இணைந்து எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தாமரை மொட்டு சின்னத்தில் போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி,  341 உள்ளுராட்சி சபைகளில் 322 சபைகளில் போட்டியிட வேட்பாளர் பட்டியல் ஒப்படைக்கத் தீர்மானித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. கிழக்கு மாகாணத்தில் மாத்திரம் 14 உள்ளுராட்சி சபைகளுக்கு கூட்டணியிலுள்ள ஒரு கட்சியின் கீழ் போட்டியிடவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.