ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான 100 கிராம் போதைப் பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் பூநகரி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர். பூநகரி பொலிஸ் பிரிவில் முச்சக்கரவண்டியில் பயணித்த போதே குறித்த பொலிஸ் அதிகாரியும் முச்சக்கரவண்டிச் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பொலிஸ் அதிகாரி சாவகச்சேரி காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த திருட்டு வழக்கு ஒன்றின் சான்றுப் பொருளான தொலைக்காட்சிப் பெட்டி ஒன்றை விற்றிருந்ததாக தெரியவருகின்றது. அது தொடர்பில் ஒழுக்காற்று