தாய்லாந்தில் மோசடி பேர்வழிக்கு 13,275 வருடம் ஜெயில்
தாய்லாந்தில் நிதி நிறுவனங்களை தொடங்கி பண மோசடியில் ஈடுபட்டவருக்கு 13,275 ஆண்டுகள் ஜெயில் தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தாய்லாந்தில் நிதி நிறுவனங்களை தொடங்கி பண மோசடியில் ஈடுபட்டவருக்கு 13,275 ஆண்டுகள் ஜெயில் தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சீனாவில் ஷாங்ஸி மாகாண தலைநகர் தையு யான் நகரில் வர்த்தக மகாலில் வைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய ராட்சத நாய் பொம்மை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முக வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் உதயசூரியன் போட்டியிடப் போவதாக தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் நேற்று முன்தினம்(27) குறிப்பிட்டிருந்ததை மறுத்துள்ள முதலமைச்சர் தமிழ் மக்கள் பேரவையின் கொள்ககளை தனது கொள்கைகளை ஒத்த கொள்கையாக இருப்பதாகவும் அக் கொள்கைகளை உடையவர்களை தான் மதிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். முதலமைச்சரின் இந்த அறிக்கையினால் திம்புக் கோட்பாடுகளை அடிப்படையாக வைத்து உள்ளூராட்சித் தேர்தலில் களமிறங்கியுள்ள கூரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் ஆனந்தசங்கரியின் கூட்டமைப்பான தமிழர் விடுதலைக் கூட்டணி நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளதாக
கிழக்கில் கதிரவன் தன் பொற் கரங்களை நீட்டி 2017 ஆம் ஆண்டை வரவேற்றான்.வடக்கு கிழக்கு இணைந்த நிலப்பரப்பே தமிழர் தாயகம். அந்த கிழக்கில் கதிரவனுக்கு நன்றி செலுத்தும் தை திங்களில் ”எழுக தமிழ்” எழுந்து நின்றது. அதற்காகன ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வட்டார முறையிலான தேர்தல், அடிமட்ட மக்கள் மத்தியில் அபிவிருத்தியை உறுதிப்படுத்தக்கூடியதாக அமையும் என தழிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராசா தெரிவித்தார் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கான தெளிவூட்டல் கருத்தரங்கு இன்று (29) யாழ். நல்லூர் பகுதியில் உள்ள இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இம்முறை 25 வீதமான பெண்கள் உள்ளூராட்சி சபை
திருகோணமலை ஜயந்திபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சூரியபுர பகுதியில் காட்டு யானை ஒன்று இறந்துள்ளதாக ஜயந்திபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் நேற்றிரவு (28) இடம்பெற்றுள்ளதாகவும், மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஜயந்திபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்கு 40,000 மெட்ரிக் தொன் உரம் வழங்க பாகிஸ்தான் பிரதமர் உறுதியளித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். தன்னுடன் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போது பாகிஸ்தான் பிரதமர் இதனைக் கூறியதாக ஜனாதிபதி தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார். இலங்கை எதிர்நோக்கியுள்ள உரப் பிரச்சினை சம்பந்தமாக தொலைபேசி மூலம் பாகிஸ்தான் பிரதமரிடம் தெரிவித்த போது அவர் இந்த உறுதி மொழியை வழங்கியதாக ஜனாதிபதி கூறினார்.
மிகவும் பொறுப்புவாய்ந்த, வினைத்திறனான இணைய ஊடகத்துறைக்காக உருவாக்கப்பட்ட ஒழுக்கக்கோவையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று கொழும்பில் இடம்பெற்றது. இணைய ஊடகவியலாளர் சங்கத்தினால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, இணைய ஊடகத்துறைக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ஒழுக்க நெறிக்கோவை தயாரிப்பு பணியானது மிகவும் முக்கியமானதாகும் என்று தெரிவித்தார். அத்துடன் இது ஊடகத்துறைக்கு மட்டுமன்றி அரசியல் துறை மற்றும் முழு மனித சமூகத்திற்கும் காலத்திற்குத் தேவையானதொரு பணியாகும் என்றும் ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார். இணைய
பல இன்னல்களுக்கு மத்தியில் ஒன்றிணைத்த நாட்டை பிரித்து வேட்டையாட பலரும் முயற்சிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். எதிரணி தலைவர்கள் பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் அரசாங்கத்தில் இணைகின்றனர். எதிர்பார்ப்புகள் நிறைவேறா விட்டால் எங்கு செல்வார்கள். அவ்வாறு செல்பவர்களும் அரசாங்கத்திற்கு எதிராண நிலைப்பாட்டிலேயே உள்ளனர். ஆனால் அவ்வாறான ஒரு குறுகிய நோக்கம் மக்களிடம் இல்லை. எனவே அரசாங்கத்திற்கு எதிரானதும் ஆதராவனதுமான தெளிவான ஒரு பிளவு தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ளது. இந்த பிளவு மேலும் வலுவடையும். பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில்
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை மின்னஞ்சல் ஊடாக முன்வைப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கும் அந்த மாவட்டத்தின் பெயரை முதலில் பயன்படுத்தி ( மாவட்டத்தின்பெயர்.complaint@gmail.com ) என்ற மின்னஞ்சல் மூலம் முறைப்பாடுகளை அனுப்பு முடியும்.