திருகோணமலையில் காட்டு யானை உயிரிழப்பு

5236 22

திருகோணமலை ஜயந்திபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சூரியபுர பகுதியில் காட்டு யானை ஒன்று இறந்துள்ளதாக ஜயந்திபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் நேற்றிரவு (28) இடம்பெற்றுள்ளதாகவும், மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஜயந்திபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment