பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில் சேவையில் மாற்றம் – தெற்கு ரெயில்வே அறிவிப்பு
சென்னை-கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் உள்ள பொன்னேரி ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் கீழ்க்கண்ட மின்சார ரெயில்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை-கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் உள்ள பொன்னேரி ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் கீழ்க்கண்ட மின்சார ரெயில்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள இமேஜ் ஆடிட்டோரியத்தில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவுக்கு தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி, ஏழை-எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் 48 மணி நேர காத்திருப்பு போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
நியாயவிலைக்கடை பணியாளர்களை போட்டித்தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில், உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்பாளர்களை நிறுத்துவதற்கான ஆசனப்பங்கீடுகள் நிறைவுபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் முன்முயற்சியுடன், தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் பங்காளிக் கட்சிகளின் பிரமுகர்கள் பங்கேற்ற கூட்டத்திலேயே இதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.இதற்கமைய யாழ்ப்பாண மாவட்டத்தில் மாநகர சபை சாவகச்சேரி நகர சபை, பருத்தித்துறை நகர சபை, சாவகச்சேரி பிரதேச
300 கிலோவிற்கும்அதிகமானகேரளக்கஞ்சாவத்தளைஹூணுப்பிட்டிய பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளது. முல்லைத்தீவு – விஸ்வமடு பகுதியிலிருந்து தேங்காய் ஏற்றி வந்த லொறியில் இருந்தே இந்த கேரளக்கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த கஞ்சாத் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.மூன்று கோடி ரூபா பெறுமதியான கேரளக்கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்ட லொறியின் சாரதி இன்று மகர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். இதேவேளை, ஹெரோயின் போதை வில்லை மற்றும் கேரளக்கஞ்சாவுடன் 5 சந்தேகநபர்கள் நாட்டின் பல பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.கொழும்பு பலாமர சந்தி,
மிதிவெடிகள் அகற்றப்பட்ட கிளிநொச்சி – முகமாலை பகுதி, கடந்த 12ம் திகதி பளை பிரதேச செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், அங்கிருந்து இடம்பெயர்ந்த மக்கள், மீளவும் அப் பகுதிகளுக்கு சென்று தமது காணிகளில் சிரமதானப் பணிகளை ஆரம்பித்துள்ளனர். இதேவேளை, அப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த நிலையில் தற்போது தற்காலிக இடங்களில் வசித்து வரும் மக்களை மீள் குடியேற்றவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கமைய, மிதி வெடிகள் அகற்றப்பட்ட 48 ஏக்கர்கள் வரையான நிலங்களில் அரசாங்கம் மீண்டும் மீள்குடியேற்றங்களை மேற்கொள்ளும்
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேரம் எகமுத்துகம பிரதேசத்தில் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று இன்று அதிகாலை 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர் வெங்கடாசலம் சகுந்தலா வயது 52 என அடையாளம் காணப்பட்டுள்ளார். தனது வீட்டின் நீர் இறைக்கும் மோட்டாருக்கு அருகாமையில் மின் கம்பியை பிடித்தவாறு விழுந்து கிடந்ததாகவும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் 2 மணித்தியாலத்துக்கு முன்னதாகவே உயிரிழந்துள்ளதாகவும் அவரின் பிள்ளைகள் தெரிவித்தனர். குறித்த
தேர்தல் காலத்தில் பிரச்சார நடவடிக்கைகளின் போது பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பயன்பாட்டை மட்டுப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார். பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பயன்பாட்டை தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு ஜனாதிபதி இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.
மாதாந்தம் 100,000 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதியமைச்சு கூறியுள்ளது. அடுத்த ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டு வரை இவ்வாறு அரிசி இறக்குமதி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு கூறியுள்ளது. இந்த பண்டிகைக் காலத்தில் நுகர்வோருக்கு தேவையான அளவு அரிசியை தட்டுப்பாடின்றி பெற்றுக் கொள்வதற்கும், நியாயமான விலையில் பெற்றுக் கொள்வதற்குமாகவே இவ்வாறு இறக்குமதி செய்யப்பட உள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்ற பொருளாதார முகாமைத்துவம் சம்பந்தமான அமைச்சரவை உபகுழுவால் இந்த தீர்மானம்