புயல்-மழை பாதிப்புகளை சரிசெய்ய ரூ.9302 கோடி ஒதுக்கும்படி பிரதமரிடம் கோரிக்கை

Posted by - December 19, 2017

தமிழகத்தில் பருவமழை மற்றும் புயல் பாதிப்புகளை சரிசெய்வதற்கு மொத்தம் 9302 கோடி ரூபாய் ஒதுக்கும்படி பிரதமரிடம் கோரிக்கை வைத்திருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

ஆர்.கே.நகரில் வெளியாட்களுக்கு தடை: 21-ம் தேதி மாலை வரை கருத்துக் கணிப்புக்கும் தடை விதிப்பு

Posted by - December 19, 2017

ஆர்.கே.நகர் தொகுதியில் பிரச்சாரம் இன்று மாலை 5 மணியுடன் ஓய்ந்ததையடுத்து வெளியாட்கள் தொகுதியை விட்டு வெளியேறும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆர்.கே. நகர் தொகுதியில் பிரசாரம் ஓய்ந்தது

Posted by - December 19, 2017

ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. நாளை மறுநாள் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

பிணை முறி மோசடி விவகாரம்- தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியை பாதிக்கும்

Posted by - December 19, 2017

மத்திய வங்கி பிணை முறி மோசடியானது ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியை பாதிக்கும் என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இது எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றி வாய்ப்பினை மிக மோசமாக பாதிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதேபோல மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன முன்னணி கட்சியும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் பாரிய தோல்வியைத் தழுவும் என எதிர்ப்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சுதந்திரக் கட்சிக்கு மாத்திரமே தேர்தலில் வெற்றிபெறக்கூடிய சாத்தியங்கள் அதிகளவில்

மலேசியா – இலங்கை இடையில் ஒத்துழைப்பை உறுதிப்படுத்துவதற்கு இரு நாட்டு தலைவர்களும் இணக்கம்

Posted by - December 19, 2017

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்திருக்கும் மலேசிய பிரதமர் நஜீப் ரஸாக் மற்றும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று (18) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகை தந்த மலேசியப் பிரதமரை ஜனாதிபதி மகிழ்ச்சியுடன் வரவேற்றார். 21 பீரங்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு, இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் இவ்வரவேற்பு இடம்பெற்றது. இரு நாடுகளின் தலைவர்களுக்கிடையிலான சந்திப்பைத் தொடர்ந்து இரு தரப்பு பேச்சுவார்த்தை இடம்பெற்றது. மலேசியாவுக்கும் இலங்கைக்குமிடையில் பல்வேறு துறைகளில்

தனித்துப் போட்டியிடும் பகுதிகளுக்கான மு.க.வின் வேட்புமனுக்கள் தயார்

Posted by - December 19, 2017

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக  ஸ்ரீ முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட தீர்மானித்துள்ள பகுதிகளுக்கான வேட்பு மனுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக, அக் கட்சியின் உப தலைவர் எம்.நைமுல்லா தெரிவித்துள்ளார். 

2020 இல் நாட்டின் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க

Posted by - December 19, 2017

2020 ஆம் ஆண்டில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க செயற்படுவார் என சர்வதேச வர்த்தக இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தற்போது நாமல் ராஜபக்ஷவை எதிர்க்கட்சி தலைவராக்குவதே மஹிந்த ராஜபக்சவின் பிரதான நோக்கமாகவுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ தற்போது இதற்கான திட்டங்களை அமைத்து வருகின்றார். இதற்காகவே, கோத்தபாய, பசில், சமலை புறக்கணித்து வருகிறார். இதனால் குடும்பத்திற்குள்ளேயே போட்டியை ஆரம்பித்துள்ளார். மேலும், இலங்கையின்

பரீட்சை விதிமுறைகளை மீறுவோருக்கெதிராக கடுமையான சட்டம் – கல்வி அமைச்சர்

Posted by - December 19, 2017

பரீட்சை விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சின் மூலம் பரீட்சை ஆணையாளர் மற்றும் பொலிஸாருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சை நடவடிக்கைகளை சரியாக மேற்கொள்ளும் மாணவர்களுக்கு நீதியை நிலை நாட்டும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, பரீட்சை விதிமுறைகளை மீறும் குறித்த மாணவர்களுக்கு பரீட்சை சட்டத்திற்கு மேலதிகமாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் மூலமும் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. நடைபெற்று வருகின்ற க.பொ.த. சாதாரண தர

உள்ளூராட்சி மன்ற தேர்தல் : 15 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு பணியில்

Posted by - December 19, 2017

248 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்கள் பொறுப்பேற்கும் பணி நேற்று ஆரம்பமானது. இதற்கமைவாக சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதற்காக 15 ஆயிரம் பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உள்ளுராட்சி மன்ற தேர்தல் கட்டளைச் சட்ட விதிமுறைக்கு அமைவாக நாட்டில் எந்தவொரு இடத்திலும் எத்தகைய தேர்தல் ஊர்வலமும் நடத்தப்படுவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. ஊர்வலம் நடத்தப்படுவது தொடர்பிலான சட்டம் கடுமையாக நடத்தப்படும் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சட்டத்தரணி ருவான் குணசேகர தெரிவித்தார். இதற்கு மேலதிகமாக தேர்தல் பிரசார நடவடிக்கைக்கு பொலித்தீனை

பெருந்தொகை கைபேசிகளை கடத்த முற்பட்ட மூவர் கைது

Posted by - December 19, 2017

தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் அனுமதியின்றி ஒருதொகை கையடக்கத் தொலைபேசிகளை நாட்டுக்கு கொண்டுவந்த மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.