தனித்துப் போட்டியிடும் பகுதிகளுக்கான மு.க.வின் வேட்புமனுக்கள் தயார்

242 0

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக  ஸ்ரீ முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட தீர்மானித்துள்ள பகுதிகளுக்கான வேட்பு மனுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக, அக் கட்சியின் உப தலைவர் எம்.நைமுல்லா தெரிவித்துள்ளார். 

சில உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இடையில் தொடர்ந்தும் கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக அவர் கூறியுள்ளார்.

இதன்படி, குறித்த கலந்துரையாடல்களின் பின்னர், சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களில் தனித்து போட்டியிடுவதா அல்லது ஐக்கிய தேசியக் கட்சியிடன் இணைந்து போட்டியிடுவதா என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a comment