மட்டக்களப்பு மாவட்டத்தில் 79 வேட்புமனுக்கள் ஏற்பு, இரண்டு நிராகரிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டாவது தொகுதியான 8 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்கோரலில் 81 வேட்புமனுக்கள் கிடைக்கப்பெற்று அவற்றில் 79 ஏற்றுக் கொள்ளப்பட்டதுடன், இரண்டு நிராகரிக்கப்பட்டுள்ளதாக, மட்டக்களப்பு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட அரசாங்க அதிபருமான மாணிக்கம் உதயகுமார், இன்று வியாழக்கிழமை பிற்பகல் 2.20 மணியளவில் தெரிவித்தார். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டமை குறித்து அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே, அவர் இதனைத் தெரிவித்தார். இந்த 8 சபைகளுக்குமென 84 கட்டுப்பணங்கள் கிடைக்கப்பெற்றிருந்த போதிலும் 81

