இரத்மலானை விமான நிலையத்தை விருத்தி செய்ய திட்டம்

5752 0

இரத்மலானை விமானநிலையத்தின் ஓடுபாதைக்கு தெற்குப் பிரதேசத்தில் காணப்படுகின்ற 25 ஏக்கர் அளவிலான நிலப்பகுதியை சிவில் விமான சேவைகள் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் அப்பகுதியில் அமைந்துள்ள இலங்கை விமானப்படை முகாமின் பகுதியொன்றை இலங்கை விமானப்படையினரின் இணக்கத்துடன் விமான நிலையத்தின் வடபகுதியில் புனரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது.

Leave a comment