வவுனியாவில் ஊடகவியலாளர்களுக்கு விருதுகள் வழங்கி கெளரவிப்பு.!!!

Posted by - December 22, 2017

வவுனியா – வைரவபுளியங்குளத்தில் இயங்கிவரும் சர்வதேச கேம்பிறிட்ஜ் கல்லூரியினால்  இன்று காலை 9 மணியளவில் ஓவியா விருந்தினர் விடுதி மண்டபத்தில் நடாத்திய விருது வழங்கும் நிகழ்வில் வவுனியாவைச் சார்ந்த ஐந்து ஊடகவியலாளர்களுக்கு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது. கல்லூரியின் இலங்கைக்கான முதல்வர் சந்திரகுமார் தலமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வவுனியா தெற்கு வலய கல்விப்பணிப்பாளர் ராதாகிருஷ்ணன், வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பரந்தாமன், ஆயுபோவான் நிறுவனத்தின் கனேடிய பணிப்பாளர், இலங்கைக்கான இயக்குனர், ஐ.சி.சி கம்பஸ் நிறுவனத்தின் தலைவர் என பலரும்

50 இலட்சம் பெறுமதியான வெளிநாட்டு போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

Posted by - December 22, 2017

சுமார் 50 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு போதைப்பொருட்களை கொழும்பு துறைமுகத்திலிருந்து இரகசியமான முறையில் கொண்டு செல்ல முயற்சித்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாரின் எச்சரிக்கையை மீறி குறித்த நபர் தப்பிச்செல்ல முயற்சித்த வேளையில் கொட்டஹேன கல்பொத்த சுற்றுவட்டத்தில் சொகுசு வேண் ஒன்றுடன் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவத்தில் பொலிஸாரின் மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளானதாகவும் இதனால் இரு பொலிஸ் அதிகாரிகள் சிறு காயங்களுக்கு உள்ளாக்கியிருப்பதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்

வேட்பாளர்களில் அநேகர் குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்டவர்கள்- பெப்ரல்

Posted by - December 22, 2017

உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளவர்களில் குற்றவாளிகள் இருப்பதாக பெப்ரல் அமைப்பு அறிவித்துள்ளது. மாட்டு திருடர்கள், கொள்ளையர்கள், நிதி மோசடிக் காரர்கள், சட்ட முரணான போதைப் பொருள் வியாபாரிகள் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புபட்டவர்கள் காணப்படுவதாக பெப்ரல் அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக அவ்வமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இத்தகையவர்கள் தொடர்பில் தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கையில் உள்ளதாகவும் தகவல்கள் ஊர்ஜீதப்படுத்தப்பட்டதும் அவர்களின் பெயர்களை வெளியிடவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். இத்தகையவர்களுக்கு வாக்களிப்பதிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறு

யாழ் கோட்டையை அண்மித்த பகுதியில் தகனம் செய்ய யாழ் நீதவான் நீதிமன்றம் அனுமதி!

Posted by - December 22, 2017

மறைந்த யாழ் நாக விகாரை விகாராதிபதியின் பூதவுடலை யாழ் கோட்டையை அண்மித்த பகுதியில் தகனம் செய்ய யாழ் நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

14 சபைகளில் ஏணி தனித்து போட்டி – மனோகணேசன்

Posted by - December 22, 2017

தமிழ் முற்போக்குக் கூட்டணியானது ஒருமித்த முற்போக்குக் கூட்டணி என்ற பெயரில் ஏணி சின்னத்தில் தனித்து மாவட்டவாரியாக 14 சபைகளுக்கு போட்டியிடுகின்றது. கொழும்பு மாவட்டத்தில் கொழும்பு மாநகர சபையிலும், இரத்தினபுரி மாவட்டத்தில் பலாங்கொடை பிரதேச சபை, இம்புல்பே பிரதேச சபை,கொடக்கவெல பிரதேச சபை ஆகியவற்றிலும், மாத்தளை மாவட்டத்தில் மாத்தளை மாநகர சபை, மாத்தளை பிரதேச சபை, இறத்தோட்டை பிரதேச சபை ஆகியவற்றிலும், கண்டி மாவட்டத்தில் கண்டி மாநகர சபை, நாவலப்பிட்டிய நகர சபை, கம்பளை நகர சபை, பன்வில

அடுத்த வருடத்திற்கான இலவச பாடப் புத்தக விநியோகம் ஆரம்பம்

Posted by - December 22, 2017

2018 ஆம் ஆண்டுக்கான பாடசாலை பாடப் புத்தகங்கள் விநியோகிக்கும் பணிகள் வெற்றிகரமாக இடம்பெற்றுவருவதாக கல்வி வெளியீட்டுத் திணைக்கள ஆணையாளர் பத்மினி நாளிக்கா வெலிவத்த தெரிவித்துள்ளார். இம்முறை தரம் மூன்றுக்கான பாடப் புத்தகங்கள் புதிதாக அச்சிடப்பட்டுள்ளதாகவும் தரம் ஒன்பதுக்கான பாடப் புத்தக விநியோகப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் பாடப் புத்தகங்கள் உரிய பாடசாலைகளின் அதிபர்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இலவச பாடப் புத்தக விநியோகம் தொடர்பான தேசிய வைபவம் அடுத்த மாதம் 11ஆம் திகதி கொழும்பு டி.எஸ்.சேனாநாயக்க கல்லூரியில்

சம்பந்தன் வைத்தியசாலையில் அனுமதி

Posted by - December 22, 2017

எதிர்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வேட்பு மனுத்தாக்கல் மற்றும் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போது திடீரென ஏற்பட்ட சுகயீனத்தினால் எதிர்கட்சித் தலைவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. எவ்வாறாயினும் அவரது உடல்நிலை வழமைக்குத் திரும்பி வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் கூறுகின்றன.

புதிய இராணுவப் பேச்சாளராக பிரிகேடியர் சுமித் அதபத்து நியமனம்

Posted by - December 22, 2017

புதிய ஊடக பணிப்பாளர் மற்றும் இராணுவ பேச்சாளராக இராணுவ பொறிமுறை காலாட் படையணியின் சிரேஷ்ட அதிகாரியான பிரிகேடியர் சுமித் அதபத்து பதவியேற்றுள்ளார். கொழும்பு 4இல் அமைந்துள்ள அவரது பணிமனையில் தனது கடமைகளை நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் 1986 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17 ஆம் திகதி இலங்கை இராணுவ நித்திய படையணியில் இணைந்து 32 வருடங்களை பூர்த்தி செய்த பிரிகேடியர் சுமித் அதபத்து இராணுவ சிங்க படையணி மற்றும் பொறிமுறை காலாட் படையணியில் பதவிநிலை கடமைகளையும் வகித்துள்ளார்.

முன்னாள் கடற்படைப் பேச்சாளர் உள்ளிட்ட ஐவர் மீண்டும் சிறையில்

Posted by - December 22, 2017

முன்னாள் கடற்படைப் பேச்சாளர் கட்டளைத் தளபதி டி.கே.பி.தசநாயக்க மற்றும் 5 பேர் எதிர்வரும் ஜனவரி 2 ஆம் திகதி வரை மீண்டும் சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். கோட்டை நீதிவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இலங்கையின் விஷேட குழுவொன்று ரஷ்யா செல்கிறது

Posted by - December 22, 2017

ரஷ்யா நாட்டில் இலங்கை தேயிலை தடை செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் இலங்கையிலிருந்து விசேட குழுவொன்று ரஷ்யா பயணமாகவுள்ளதாக தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிலைய தலைவர் கலாநிதி ஜெயந்த கவரம்மான தெரிவித்தார். ரஷ்யா நாட்டினால் இலங்கை தேயிலைக்கு ஏற்பட்டுள்ள தடை தொடர்பில் தேயிலை சிறுபோக உற்பத்தியாளர்களுக்கு விளக்கமளிக்கும் விசேட கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்தார் தலாவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிலைய கேட்போர் கூடத்தில் 22.12.2017 இடம்பெற்ற கலந்துரையாடலில் ரஷ்ய நாட்டிற்கு 18 ஆயிரம் மெட்ரிக்டொன் தேயிலை தூள் தாங்கியில் ஒரு