இலங்கையின் விஷேட குழுவொன்று ரஷ்யா செல்கிறது

219 0
ரஷ்யா நாட்டில் இலங்கை தேயிலை தடை செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் இலங்கையிலிருந்து விசேட குழுவொன்று ரஷ்யா பயணமாகவுள்ளதாக தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிலைய தலைவர் கலாநிதி ஜெயந்த கவரம்மான தெரிவித்தார்.

ரஷ்யா நாட்டினால் இலங்கை தேயிலைக்கு ஏற்பட்டுள்ள தடை தொடர்பில் தேயிலை சிறுபோக உற்பத்தியாளர்களுக்கு விளக்கமளிக்கும் விசேட கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்தார்

தலாவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிலைய கேட்போர் கூடத்தில் 22.12.2017 இடம்பெற்ற கலந்துரையாடலில் ரஷ்ய நாட்டிற்கு 18 ஆயிரம் மெட்ரிக்டொன் தேயிலை தூள் தாங்கியில் ஒரு வகை பூச்சியினம் இருந்ததையிட்டு தற்காலிக தடையை ரஷ்யா விதித்துள்ளது.

இந் நிலையில் ஜனாதிபதி மற்றும் அமைச்சர் நவீன் திசாநாயக்க ஆகியோரின் ஆலோனைக்கமைய விசேட குழுவென்று எதிர்வரும் 25 ம் திகதி ரஷ்யா பயணமாகவுள்ளனர்.

தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிலையத்தின் அதிகாரி கலாநிதி கீர்த்தி மோட்டி உட்பட ஆய்வு குழுவொன்று இவ்வாறு பயணமாகவுள்ளது.

Leave a comment